Monday, April 22, 2013

சட்ட விரோத சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்!

சத்தியமங்கலம் புலிகள் காப்பகமானது 1408.405 சதுர கிலோமீட்டர் பரபளவு கொண்டது. அதன் மையப்பகுதி 793.493 சதுர கிலோமீட்டர். சுற்றுப்பகுதி 614.912 சதுர கிலோமீட்டர் ஆகும். இந்த அறிவிப்பானது G.O.(M.S) No.41 dated 15 March 2013 of Environment and Forest (FRV) ன் படி தமிழக அரசால்  வெளியிடப்பட்டது.இந்நிலையில, அறிவிக்கை வெளியிடுவதற்கு முன்பும், இன்றும் தொடர்ந்து பழங்குடிகள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.அவர்களின் கோரிக்கை, சட்டத்தின் வழிகாட்டலின் படி புலிகள் காப்பகம் அமைக்கப்பட வேண்டும் என்பது மட்டுமே. எவ்வாறு சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் சட்டத்திற்கு புறம்பானது என்று தெரிந்து கொள்வது, மக்களுக்காக தொடர்ந்து போராட்ட களத்தில் நிற்கும் தோழர்களுக்கு பயனுள்ளதாக வலு சேர்க்கும்.  

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் குறித்த அறிவிப்பானது கீழ்கண்ட சட்ட விதிமுறைகளை முழுமையாக மீறியுள்ளது.

அ) 2006ல் திருத்தப்பட்ட கானுயிர் பாதுகாப்புச் சட்டம் 4.9.2006 முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன் விதிமுறைகள் முழுமையாக மீறப்பட்டுள்ளன.

ஆ)நிபுணர் குழுவை அமைத்தல், அதன் பணிகளை வரையறுத்தல், அறிவியல் பூர்வமான தகவல்கள் சேகரித்தல், தேவைப்படும்பட்சத்தில் மறுகுடியேற்றம் தொடர்பான விவகாரங்களை முடிவு செய்தல் போன்றவற்றுக்கான வனஉரிமைச்சட்டம் 2006 கூறும் வழிகாட்டு விதிமுறைகளை முழுமையாக புறக்கணித்துள்ளது.

1.புலிப்பாதுகாப்பு பவுண்டேசன்/ மாநில அரசு அல்லது தேசிய புலிபாதுகாப்பு அதாரிடியால் அங்கீகரிக்கப்பட்ட சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கான புலிப்பாதுகாப்புத் திட்டத்தின் விவரங்களை எங்களுக்கு வழங்கவில்லை.

2.கானுயிர்ப் பாதுகாப்புச் சட்டம் 2006 ன் பிரிவு 38வி (5) (ii)ல் குறிப்பிட்டுள்ளபடி முற்றிலும் பாதுகாக்கப் பட வேண்டிய பகுதி என்று வரையறுக்க வேண்டிய பகுதியில் வாழும் பழங்குடி மக்கள் மற்றும் காட்டில் வாழும் மற்ற பிரிவு மக்களின் ஒப்புதல் பெறப்படவில்லை.

3.கானுயிர் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு.38 V (4)(ii)ன் கீழ் சுற்றுப் பகுதி பிரிக்கப்படவில்லை. இவ்வாறு பிரிக்கப் படும்போது விலங்குகளும் மனிதர்களும் இணைந்து வாழ்வது முன்னிலைப் படுத்தப்படவேண்டும். அவ்வாறு செய்யப் படும் போது மக்களின் வாழ்வாதாரங்கள், சமூக, காலாச்சார மற்றும் வளர்ச்சிக்கான உரிமைகள் ஆகியவை கனக்கிலெடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று மேற்குறிப்பிடப்பட்ட பிரிவில் கூறப்பட்டுள்ளது. இந்த சுற்றுப் பகுதியின் எல்லைகள் தொடர்புடைய கிராம சபைகளைக் கலந்துரையாடி ,விஞ்ஞானபூர்வமான வெளிப்படையான முறையில் வரையறுக்கப்படவேண்டும் ஒரு நிபுணர் குழு இதற்காக உருவாக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது.

4.பாதிக்கப்பட உள்ள பகுதிகளில் உள்ள மக்களின் நில உரிமைகள் முழுமையாக வழங்கப்பட்டு விட்டன என்று கிராம சபைகள் தீர்மானங்கள் பெறப்பட்டு இருக்க வேண்டும். அவ்வாறு செய்யப்படவில்லை நிபுணர் குழுவை அமைத்தல், அதன் பணிகளை வரையறுத்தல், அறிவியல் பூர்வமான தகவல்கள் சேகரித்தல், தேவைப்படும்பட்சத்தில் மறுகுடியேற்றம் தொடர்பான விவகாரங்களை முடிவு செய்தல் போன்றவை உள்ளீட்ட வனவிலங்குகள் அடர்த்தியாக வாழும் மையப் பகுதியாக ஒரு இடத்தை அறிவிக்கத் தேவையான வழிகாட்டு நெறிமுறைகள் என்ற சுற்றுச் சூழல் மற்றும் வனங்கள் அமைச்சகம்வெளியீட்டில் (தேதி 30.10.2007) பத்தி 4(vi) கூறுகிறது.

5.இந்த வெளியீட்டின் பத்தி 5ல் கூறியுள்ள படி நிபுணர் குழுவால் பொது விசாரணைகள் நடத்தப் படவில்லை.

6.மையப்பகுதிகளில் இருந்து மக்களை மறு குடியேற்றம் செவ்வது என்பது ஒரு விரிவான நடைமுறையாகும். மறு குடியேறப் படும் இடம் தெரிவு செய்யப்பட வேண்டும். தேசிய மறுவாழ்வுத் திட்டம் குறிப்பிடும்படி பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தனிநபருக்கும், குழுவுக்கும் வாழ்வாதாரங்கள் வழங்கப்பட வேண்டும். அதற்கான கால அளவு வரையறுக்கப் பட வேண்டும். கானுயிர் பாதுகாப்புச் சட்டம் பிரிவு 38V(5)(iv)ல் கூறப்பட்டுள்ளபடி இந்தத் திட்டங்களுக்கான நிதியாதாரங்கள் உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும்.

7.பாதிக்கப் படவுள்ள தனிநபர்கள் மற்றும் கிராமசபைகளின் ஒப்புதல் பெறப்பட வில்லை. கானுயிர் பாதுகாப்புச் சட்டம் பிரிவு 38V(5) (iv), (v) and (vi); ல் கூறப்பட்டுள்ளபடி மறுகுடியேற்றத் திட்டத்திற்கு இவ்வாறு மக்களின் ஒப்புதல் பெறப்படவில்லை.

-------
ஆக்கம் : சி.ஆர்.பிஜாய்

மொழிப்பெயர்ப்பு: இரா.முருகவேள்

Saturday, April 20, 2013

வன உரிமைச் சட்டம் 2006

பழங்குடி மக்களின் பொருளாதாரம் காட்டை அடிப்படையாகக் கொண்டிருந்தது. உப்பையும் உடையையும் தவிர தங்களுக்குத் தேவையான அனைத்தையும் அவர்கள் காடுகளிலிருந்தே பெற்றனர். இது 16ம் நூற்றாண்டுக்கு முந்தைய நிலை. காடுகள் முழுவதும் பழங்குடி சமூகத்திற்குச் சொந்தமாக இருந்தது. தனி நபர்களுக்கு உடமை என்றில்லாவிட்டாலும் சுதந்திரமாகப் பயன்படுத்தி வந்தனர்.

1805
ல் பிரிட்டிஷாரின் கண் வனத்தின் மீது பட்டது. 1846ல் முதல் வனச்சட்டம்கொண்டு வரப்பட்டது. பிரிட்டிஷ் அரசு காட்டை வியாபார ரீதியாகப் பயன்படுத்த ஆரம்பித்தது.

சென்னை ராஜதானியில் 1856ல் வன இலாகா என்ற துறை அமைக்கப்பட்டது. இத்துறை மூலம் 1865ல் முதல் வன ஆணை பிறப்பிக்கப்பட்டது. இதன் மூலம் அனைத்து வனப் பகுதிகளும் வனப்பாதுகாப்பு என்ற பெயரில் ஆங்கிலேயரின் நேரடி ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன. இதனால் ஆதிவாசிகள் காடுகளில் சுதந்திரமாக உலவத் தடை கொண்டு வரப்பட்டது. இத் தடை பழங்குடி மக்களின் வாழ்வையும், பொருளாதாரத்தையும் சீர்குலைத்து சின்னாபின்னமாக்கிவிட்டது.

பிரிட்டிஷ் தோட்ட முதலாளிகள் ஏராளமான காப்பி மற்றும் தேயிலைத் தோட்டங்களை உருவாக்கினர். இத்தகைய தோட்டங்களில் அடிமைகளாகவும், பின்னர் கூலிக்காரர்களாகவும் ஆதிவாசிகள் ஆக்கப்பட்டனர்.

ஆங்கிலேயர்களின்  ஆட்சி காலத்தில் வனம் மற்றும் நில சம்பந்தமான பல்வேறு சட்டங்கள் இயற்றப்பட்டன. இந்திய விடுதலைக்கு பிறகும் பழங்குடி மக்கள் தொடர்ந்து தங்களது பராம்பரிய உரிமைகளுக்காக தொடர்ந்து போராட வேண்டிய நிலை இருந்து வந்தது. இந்த போராட்டங்களின் விளைவால், மத்திய அரசு 2006-ம் ஆண்டு பட்டியல் பழங்குடியினர் மற்றும் பாரம்பிய வன வாழ்மக்களின் ( வன உமைகளை அங்கீரிக்கும்) சட்டம் 2006-ல் கொண்டு வந்தது. முதல் முறையாக சமூக உரிமையை அங்கீகரிக்கும் சட்டம் இதுவே.

பட்டியல் பழங்குடியினர் மற்றும் பராம்பரிய வனவாழ் மக்கள் ( வன உரிமைகள் அங்கீகரிக்கும் ) சட்டம் 2006- Scheduled Tribes and Other Traditional Forest Dwellers (Recognition of Forest Rights) Act, 2006  இதனை சுருக்கமாக வன உரிமைச்சட்டம்  என்று அழைக்கிறாகள். 

வன உரிமைச் சட்டத்தின் சிறப்பு அம்சங்கள் பின்வருமாறு.
1.   2005 டிசம்பா 13-ல் தேதிக்கு முன்பாக காடுகளில் வசிக்கும், விவசாயம் செய்து வரும் நிலங்களுக்கு இச்சட்டம் பொருந்தும்.
2.   மேற்குறிப்பிட்ட தேதியில் பழங்குடி என நிரூபிக்கப்பட்டவர் எதையெல்லாம் அனுபவித்து வருகிறாரோ, குறிப்பாக 10 ஏக்கர் மிகாத அளவில் விவசாயம் செய்து வந்தால், குடியிருந்து வந்தால் அந்த நிலம் அவர்களுக்கு  வழங்கப்படும். பழங்குடி அல்லாதவர் அன்றைய தேதியில் (2005 டிசம்பர் 13) 75 வருடங்களுக்கு மேல் என்றால் பொருந்தும்.
3.   வனசிறு மகசூல்களை சேகிக்கவும், விற்கவும் உரிமை.
4.   தங்களின் சொந்த தேவைக்கு மரம், மூங்கில் உள்ளிட்ட வனப் பொருட்களைப் பயன்படுத்தி கொள்ள உரிமை.
5.   பாரம்பரியமாக பயன்படுத்தி வந்த பாதைகள், நீர்நிலைகளைப் பயன்படுத்த உரிமை.
6.   ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்கான உரிமை.
7.   சிற்றரசாகள், ஜமீன்தார்கள், ஜாகீர்தார்களால் உரிமைகள் ஏதேனும் வழங்கப்பட்டிருந்தால் அவை அங்கீகரீக்கப்படும்.
8.   காட்டு நிலங்களின் மீது எந்த ஒரு  மாநில அரசோ அல்லது உள்ளூர் அதிகார அமைப்போ வழங்கியுள்ள பட்டாக்கள் அல்லது இனாம்களை அவர்களது பெயருக்கு மாற்றி கொள்வதற்கான உரிமை.
9.   வனக் கிராமங்களை வருவாய்க் கிராமங்களாக மாற்றிக் கொள்வதற்கான உரிமை
10. காடுகளில் உயிரியல் மற்றும் கலாச்சார ஆதாரங்கள் தொடர்பான பாரம்பியமான அறிவு மற்றும் அறிவு சொத்து ஆகியவற்றிக்கான உரிமை.
11. காட்டு வளங்களை பாதுகாத்தல் மற்றும் மேலாண்மை செய்வதற்கான உரிமை.

வன உரிமையும் கிராம சபைகளும்
     வன உரிமை சட்டத்தின் படி கிராம சபைதான் அதிகப் படியான அதிகாரம் கொண்ட அமைப்பு. வன உரிமை மற்றும் வனஞ்சார்ந்த அனைத்து விதமான நடவடிக்கைகளும்  கிராமசபை ஒப்புதலில்லாமல் ஏதும் நடவாது. உதவிக் கோட்டக்குழு, மாவட்டக்குழு இவையிரண்டும் பரிந்துரை மற்றும் அங்கீகரித்தல் வேலையை மட்டும் செய்கின்றன.

கிராமசபையில்  வன உரிமைக்குழு
      கிராம சபையின் முழமாக, 10 லிருந்து 15 உறுப்பினர்கள் கொண்ட(மூன்றில் ஒரு பாதி பெண்கள்) வன உரிமைக்குழு ஏற்படுத்தி, அதன் மூலமாக வன உரிமை கேட்பவர்களின் பட்டியல் மற்றும் விபரங்களை தயாரிக்க வண்டும்.
வன உரிமைகள் குறித்த கோரிக்கைகள் மீது தீர்மானம் நிறைவேற்றி , அத்தீர்மானத்தை உதவிக் கோட்டக்குழுவிற்கு அனுப்ப வேண்டும்  
கிராமசபையின் தீர்மானத்தை பரிசீலனை செய்து அதனடிப்படையில் பரிந்துரை ஆவணத்தை, உதவிக்கோட்டக்குழு மாவட்ட குழுவிற்கு அனுப்பி வைக்கும்
இப்படியாக மாவட்டக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட தீர்மானத்தையும் பரிந்துரைகளையும் அங்கீகரித்து, வன உரிமகளை வெளியிடுதல் வேண்டும்.மேலும் அக்குழுவானது வன உரிமைகளையும் சொத்து சம்பந்தமான பட்டா உண்மை நகல் ஆகியவற்றை, சமபந்தபட்ட தனி நபருக்கும் கிராம சபைக்கும் கிடைக்க செய்ய வேண்டும்.

வன உரிமை கோர ஆவணங்கள் தேவைப்படுவன:
  • ·         அரசு பதிவேடுகள்
  • ·         கணக்கெடுப்பு விவரங்கள்
  • ·         அரசின் புள்ளி விபர அறிக்கை
  • ·         குடியேற்றம் சம்பந்தமான அரசு ஆவணங்கள்
  • ·         வரைபடங்கள்
  • ·         செயற்கைக்கோள்
  • ·         திட்டங்கள் சம்பந்தப்பட்ட அறிக்கைகள்
  • ·         வனப்பதிவேடுகள்
  • ·         பட்டாபுத்தகங்கள்
  • ·         பத்திரங்கள்
  • ·         அரசு நியமனம் செய்த குழுக்களின் அறிக்கைகள்
  • ·         அரசு உத்தரவுகள்
  • ·         அர்சு அறிக்கைகள்
  • ·         பாஸ்போர்ட்
  • ·         அடையாள அட்டைகள்
  • ·         தீர்மான நகல்கள்
  • ·         வீட்டு வரி ரசீதுகள்
  • ·         வரலாற்று கட்டிடங்கள்
  • ·         பழங்கால பரம்பரை ஆவணங்கள்
  • ·         எழுத்து சுவடிகள் 



Friday, April 19, 2013

காடுகள் தனியார் மயமாகுவதை நோக்கி...

கார்பன் டை ஆக்ஸைடு எனப்படும் கரியமிலவாயுவும், மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு பொன்ற வாயுக்களும் வளி மண்டலத்தில் பெரும் பகுதியைத் தங்கள் பிடியில் வைத்திருக்கும் வளர்ச்சியடைந்த நாடுகளின் பிரம்மாண்டமான தொழிற்சாலைகள் பல ஆண்டுகளாக தொடாந்து வெளியெற்றி வந்த புகையும் கரியுமே (கார்பன்) இதற்கு அடிப்படையான காரணமாகும்.
புவி வெப்பமடைவதன் காரணமாக கடும் வறட்சியும், உக்கிரமான புயலகளும் அடிக்கடி தோன்றுகின்றன. வெப்பம்  அதிகரித்து வருவதன் காரணமாக துருவப்பகுதிகளில் பெரும் பனிப்பாளங்கள் உருகுவதால் கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. பங்களாதேஷ், மாலத்தீவுகள், கிரேனடா போன்ற நாடுகள் பேரழிவை எதர் நோக்கியுள்ளன. இந்த நாடுகளில் கணிசமான பகுதிகள் கடல்நீரீல் மூழ்கும் நிலை உருவாகிவருகிறது. லட்சகணக்கான மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு இடம் பெயர வேண்டிய சூழ்நிலை தோன்றி வருகின்றது.
வளர்ச்சியடைந்த நாடுகளிலும் ஆசிட் ரெய்ன் எனப்படும் அமில மழை சர்வ சாதாரணமாகிவிட்டது. சுற்றுச்சுழலை மாசுபடுத்தும் தொழிற்சாலைகளுக்கு எதிராக மற்ற தொழில் நிறுவனங்களே போராடவேண்டிய சூழல் வட அமெரிக்கவிலும் ஐரோப்பாவிலும் நிலவுகிறது. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஒக்லஹொமா நகரில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் தொடங்குவதற்காக அங்கு முன்பே செயல்பட்டு வந்த பெட்ரோலிய நிறுவனங்கள் தாங்கள் வெளியிடும் ஹைரோகார்பனின் அளவைக் குறைக்கும்படி அந்நகரின் சேம்பா ஆப் காமாஸ் செய்தது. மேற்கு ஐரோப்பாவில் இது போன்ற சுற்றுச்சூழல் சீர்கேடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டங்களும் கிரீன் பீஸ் போன்ற இயக்கங்களும் வளர்ந்து வந்தன. எண்பதுகளில் நடந்த தேர்தல்களில் கீரீன் பீஸ் வேட்பாளர்கள் கிறிஸ்டியன் டெமாக்ரடிக் கட்சி போன்ற பெரும் கட்சிகளின் வேட்பாளர்களையே தோற்கடிக்கும் அளவிற்கு முன்னேறினர்.
அதைத் தொடர்ந்து தொழிற்சாலைகள் சுற்றுச்சூழலை மாசு படுத்துவதைத் தடுக்க சட்டங்கள் உருவாக்க அரசை நாபந்திப்பதற்கான சூழல் தோன்றியது. வரைமுறையின்றி நிலக்கரியும், இரும்பையும் பெட்ரோலியத்தையும் எரித்து வந்த நிறுவனங்கள் தங்கள் வரலாற்றில் முதல் முறையாக கட்டுப்பாடுகளை சந்திக்கவேண்டிய நிலையில் இருந்தன.
இந்த சூழ்நிலையில் தான் 1997ல் ஜப்பானின் கியோட்டோ நகரில் நடந்த 193 நாடுகள் கலந்து கொண்ட மாநாட்டில் கியோட்டோ புரோட்டோகால் எனப்படும் கியோட்டோ ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. இதன்படி ஐரோப்பிய யூனியன் நாடுகள் 1990களில் தாங்கள் வெளியிட்ட கார்பனில் 5 சதவீதத்தை 2012க்குள் குறைக்க ஒப்புக்கொண்டன.
     இந்த ஒப்பந்தத்தின்படி ஒவ்வொரு ஐரோப்பிய  நிறுவனத்திற்கும் அது எவ்வளவு கார்பனை வெளியிடலாம் என்பது குறித்து ஒரு வரம்பு நிர்ணயிக்கப்படும். அந்த வரம்பிற்குள் கார்பனை  உமிழ பர்மிட்டுகள் வழங்கப்படும். இந்நிறுவனங்களுக்கு இன்னும் அதிக பரட்மிட்டுகள்  தேவைப்பட்டால் அதாவது தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக கார்பனை வெளிவிட நேர்ந்தால் அதற்கு ஒரு வழி வைக்கப்பட்ள்ளது.
கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் உயர்தொழில் நுட்பத்தை செயல்படுத்துவது என்பது அதிக செலவு பிடிப்பதாகும். அதன் காரணமாக ஐரோப்பிய பெரு நிறுவனங்கள் அக்கருவிகளைத் தங்கள் ஆலைகளில் பொருத்த விரும்புவதில்லை. அதற்குப் பதிலாக மூன்றாம் உலக  நாடுகளில் அதாவது வளர்ந்து வரும் நாடுகளில் புதியதாக உருவாகிவரும் தொழிற்சாலைகளில் இக்கருவிகளைப் பொருத்தவும் அவை தாங்கள் வெளிடும் கார்பனைக் குறைக்கவும் நிதியுதவி செய்ய கியோட்டோ ஒப்பந்தம் வழி செய்கிறது.
இப்படி உயா தொழில் நுட்பத்தின் மூலம் கார்பன் வெளியீட்டைக் குறைக்கும் மூன்றாம் உலக நாடுகளில் உள்ள நிறுவனங்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட குறைவான கார்பனை வெளிட்டால் மீதமாகும் கார்பன் பர்மிட்டுகளை அதிக பர்மிட்டுகள் தேவைப்படும் வளர்ச்சியடைந்த நாட்டு நிறுவனங்களுக்கு விற்றுக்கொள்ளலாம். இந்தப்பணியை தூய்மையான வளர்ச்சி தொழில்நுட்பம் (Clean Developmental Mechanism CDM ) என்ற அமைப்பு நடத்தும். கார்பன் வணிகத்திலீடுபட விரும்பும் வளரும் நாடுகளின் தொழிற்சாலைகள் இந்த சிடிஎம் அமைப்பில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இப்படி ஒரு திட்டம் பதிவு செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டால்  எவ்வளவு தூரம் கார்பன் வெளியாவது குறைக்கப்பட்டது என்பதை சிடிஎம்-ன் நிர்வாகக் குழு கண்காணித்து கார்பன் உமிழ்வதைக் குறைத்ததற்கான  சான்றிதழ்களை (Certified emission reductions - CER) வழங்கும். ஒரு தொழிற்சாலை ஒரு மெட்ரிக் டன் கர்பன் வெளியேற்றத்தைக் குறைத்தால் அது ஒரு யூனிட் என்று கருதப்படும். ஒவ்வொரு யூனிட்டுக்கும் இன்ன விலை என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த விலைக்கு தொழில் நிறுவனம் தான் மிச்சம் பிடித்த கார்பனை விற்றுக் கொள்ளலாம்.
இந்த(CDM) முறை 2000ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வந்தாலும் 2005ல் கியோட்டோ ஒப்பந்தம் செயல்படத் தொடங்கிய பின்பே வேகம் பிடித்தது.
இதுவே கார்பன் டிரேடிங் அல்லது கார்பன் வணிகம் எனப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின்  மூலம் சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் ஐரோப்பிய நிறுவனங்கள் தங்களுக்கு எதிராகத் தங்கள் நாடுகளில் சட்டங்கள் ஏதும் இயற்றப்படாமல் தப்பித்துக் கொண்டன. அதேபோல அடிப்படையில் புவி வெப்பமடைவதற்கு காரணமாக இருந்த, இருந்து வரும் இந்த ஐரோப்பிய நிறுவனங்கள் தாங்கள் வெளியிடும் கார்பனை குறைக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதிலாக ஒரு சிறு தொகையை வளரும் நாடுகளில் முதலீடு செய்துவிட்டால் போதும்.
உதாரணத்திற்கு நமது திருப்பதி கோவில் சி.எம்.டி அமைப்பில் பதிவு செய்து கொண்டு கார்பன் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. இங்கு ஒவ்வொரு நாளும் 15,000 பேர்களுக்கு மூன்று வேளை உணவு சமைப்படுகிறது. 2003ல் திருப்பதியில் சூரிய சக்தி அடுப்புகள் பொருத்தப்பட்டன. எனவே அதற்கு முன் அங்கு பயன்படுத்தப்பட்டு வந்த டீசலின் அளவு பெருமளவு குறைக்கப்பட்டது. இதன் மூலம் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் தனக்கு வழங்கப்பட்ட அளவைவிட குறைவான கார்பனை வெளியேற்றிப் பெருமளவு கார்பன் பர்மிட்டுகள் மீதிவைத்திருந்தது. அவற்றை தேவஸ்தானம், சுவிட்சர்லாந்தை சேர்ந்த குட் எனர்ஜி எனப்படும் பசுமை தொழில் நுட்பத்தில் முதலீடு செய்யும் ஒரு நிறுவனத்திற்கு விற்று வருகிறது.
இந்த கார்பன் வணிகத்தில் பெரும்பகுதியை இந்தியாவும், சீனாவும் கைபற்றியுள்ளன. ஐரோப்பிய யூனியனில் ஏற்பட்டுள்ள தேக்கத்தின் காரணமாக கார்பன் பங்குளின் விலை வீழ்ச்சி அடைந்தாலும் இந்த வணிகத்தின் என்னவோ தொடர்ந்து  நடந்துதான் வருகிறது. உலக கார்பன் வணிகத்தின் மதிப்பு 5 ஆயிரம் கோடி டாலராகும். இதில் இற்தியா ஆண்டு ஒன்றுக்கு ஆயிரம் கோடி டாலர் ஈட்டி வருகிறது.
கியோட்டோ ஒப்பந்தம் கார்பன் வெளியிடுவதை எந்த வித்திலும் கட்டுப்படுத்தவில்லை. வளர்ச்சியடைந்த நாடுகள் தொடர்ந்து அதே அளவு கார்பனை வெளியேற்றித்தான் வருகின்றன. கியோட்டோ ஒப்பந்தம் எதில் வெற்றியடைந்தது என்றால்சுற்றசூழல் விவகாரங்களை சந்தைப் பொருளாக்குவது தொடர்ந்து வருகிறது. நீர் தனியர்  மயமாக்கப்பட்டு வருகிறது. பயோபைரஸி , ஜெனிடிக் மாடிபிகேஷன்  இவை அனைத்தும் பன்னாட்டு நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்பட்டுகின்றனஇதன் காரணமாக உலகத்தின் மிகப்பெரிய செயற்கையான சந்தையாக கார்பன் டிரேடிங் மாற்றப்பட்டுவிட்டது.” (Contestation- by Patrick Bond)
சர்வதேசப் பூவுலகின் நண்பர்கள் (Frinds Of Earth International ) அமைப்பு வெளிட்டுள்ள ஒரு அறிக்கையில் உலகின் மிகப்பெரிய எண்ணைய் நிறுவனங்கள் இந்தக் கார்பன் வணிகத்தின் மூலம் பல்லாயிரங்கோடி டாலர் ஈட்டப்போகின்றன என்று கூறியுள்ளது. கியொட்டோ ஒப்பந்தம் ஆய்வாளர்களால் வணிகத்திற்கான ஒரு ஒப்பந்தமாகவே கருதப்படுகிறது. உலக வணிக அமைப்பு (WHO) நடத்திய ஒரு கூட்டத்தில் பேசியவர்கள் இந்த நூற்றாண்டின் மிக முக்கியமான வணிக ஒப்பந்தம் என்று கியோட்டோ ஒப்பந்தத்தை குறிப்பிட்டுள்ளனர்.
     பிரிட்டிஷ் பெட்ரோலியம் மற்றும் ஷேல் நிறுவனங்கள் கார்பன் பர்மிட்டுகளை வாங்கிவிற்கும் தரகர் வேலையில் இறங்கிவிட்டன. பங்குச்சந்தை போல கார்பன் சந்தை யார் வேண்டுமானாலும் கார்பன் பர்மிட்டுகளை வாங்கி வறிறு லாபம் அடையலாம்.
உலக வங்கி தனது கார்பன் வெளியீட்டு நிதியின் மூலம் இந்த சந்தையை கைப்பற்ற முயல்கிறது. ஆசிய வளாச்சி வங்கியும் இந்த வேலையில் இறங்கியுள்ளது.
     இந்த இடத்தில் ஒன்றை நினைவு கூர்வது முக்கியமாகும். கார்பன் ட்ரேடிங்கில் கார்பன் பர்மிட்டுகளை வாங்கி விற்பது மட்டுமல்ல, வளரும் நாடுகளில் புதிய தொழிற்சாலைகளில் கார்பன் வெளியிடப்படுவதை குறைக்க உதவும் நவீன கருவிகளைப் பொருத்த மேற்குலக நாடுகள் முதலீடு செய்யவேண்டும் என்ற ஷரத்தும் உள்ளது.
     இந்தப் பிரிவை பல இந்திய நிறுவனங்கள் பயன்படுத்திக் கொண்டு கொள்ளை லாபம் அடைந்து வருகின்றன. ஜிண்டல் விஜயநகா ஸ்டீல்தான் முதல் முதலில் இந்தியாவில் இந்த வணிகத்தைத் தொடங்கிவைத்தது. ரிலையன்ஸ், பிர்லா, அம்புஜா, டாடா உள்ளிட்ட 1600 இந்திய நிறுவனங்கள் சி.டி.எம் ல் பதிவு செய்து கொண்டுள்ளன. இந்நிறுவனங்கள் கோடிக்கணக்கான டன் கார்பனை உமிழ்ந்து வருபவை. பல பிரமாண்டமான அனல்மின் நிலையங்களும் இந்தத்து தூய்மை வளாச்சித் தொழில்நுட்பத்தில் பதிவு கோரியுள்ளன. அடனி குழுமத்தின் டிரொரா, ரிலையன்ஸ் நிறுவனத்தின் சாஸன் அனல்மின் நிலையங்கள் இந்த தூய்மை வளாச்சித் தொழில்நுட்பத்தில் ஏற்கனவே பதிவு செய்து கொண்டுள்ளன. இந்த நறுவனங்கள் மஹாராஷ்ட்ராவிலும் மத்தியப் பிரதேசத்திலும் மிகப்பெரிய அளவிற்கு சுற்றுச்சூழலை மாசுபடுத்தியவை. நிலப்பறிப்பிலும் ஈடுபட்டவை. (CORPORATE SCAM IN THE NAME OF CDM REVEALED- PRESS RELEASE by NFFPFW, NESPON and DISHA 23rd November2011)
     உயர் தொழில்நுட்பம் செயல்படுத்தப்படுவதால் தாங்கள் வெளியேற்றம் கார்பன் ஒப்பீட்டளவில் குறைவானது என்று இந்நிறுவனங்கள் கூறுகின்றன. இது குறித்து ஏராளமான புகார்கள் உள்ளன. அவற்றை எல்லாம் கடந்து இது உண்மை என்றே வைத்துக் கொண்டாலும் இந்நிறுவனங்கள் தற்போதுள்ள இடங்களில் முன்பு அடாந்த பசுமைமாறாக் காடுகள் இருந்தன. அவற்றை அழித்தே இந்த ஆலைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது மறுக்க முடியாததாகும்.
      இந்நிலையில் 2012 ல் கியோட்டோ ஒப்பந்தம் நிறைவு பெறுவதால் கார்பன் வணிகம் நிறுத்தப்படலாம் என்ற ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. இதன் தொடர்ச்சியாக டர்பனில் நடந்த மாநாட்டில் இந்தியாவும் சீனாவும் கூட அதிகக் கார்பனை வெளியேற்றுகின்றன., இவையும் தங்கள் வெளியேற்றும்  கார்பனின் அளவைக் குறைக்க வேண்டும் என்று அமெரிக்கா வாதிட்டது. ஐரோப்பிய நாடுகளும் மூழ்கும் நிலையில் இருக்கும் கடலோர சிறு நாடுகளும் இதை ஏற்றுக்கொண்டன.
     இந்தியாவும் சீனாவும் பதற்றமடைந்து இதைக் கடுமையாக எதிர்த்தன. புவி வெப்பமடைவதற்கு காரணமாக இருந்த மேற்குலக நாடுகளையும் தங்களையும் ஒரே தட்டில் வைப்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது. தாங்கள் கார்பனை குறைப்பதை நினைத்தே பார்க்க முடியாது என்றன. கடைசியில் பேச்சு வார்த்தைகள் அடுத்த வருடத்திற்கு தள்ளி வைக்கப்பட்டன. கார்பன் டிரேடிங் 2017 வரை நீட்டிக்கப்பட்டது.
     இது ஒருபுறமிருக்க இந்தத் தூய்மை வளர்ச்சித் தொழில் நுட்ப அமைப்பில் கார்பன் அளவைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கும் வளரும் நாடுகளின் மழைக்காடுகளை சேர்க்கவில்லை. வனங்கள் ஏராளமான கார்பனை வளிமண்டலத்திலிருந்து  உள்ளிழுத்து தங்களுக்குள் சேமித்து வைத்துக் கொண்டுள்ளன. காடுகளை அழிப்பதால் இப்படி காடுகளை அழிப்பதைத் தடுப்பதும் வனங்களைப் காதுகாப்பதும் கார்பன் வெளியிடப்படுவதைத் தவிர்க்கும் முக்கியமான நடவடிக்கைகள். எனவே இவையும் கார்பன் வணிகத்தில் சோக்கப்பட வேண்டும். அதாவது காடுகளைக் காப்பாற்றி வைப்பவாகளுக்கு அதன் மூலம் லாபம் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கை தீவிரமாக எழுப்பப்பட்டு வருகிறது.
     மழைக் காடுகள் உள்ள நாடுகளின் கூட்டமைப்பு என்ற அமைப்பின் தலைமையின் கீழ்இப்போது காடுகள் (Forests Now)” என்ற பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 300 என்.ஜி. க்களும், வணிக நிறுவனங்களும், அரசியல்வாதிகளும் கையெழுத்திட்டுள்ளனர்.
     இந்தியாவின் இயற்கை காடுகளையும் சி.டி.எம்மில் இணைக்க வேண்டும். அதாவது கார்பன் வணிக வட்டத்திற்குள் கொண்டு வரவேண்டும் என்று நமது இந்திய அரசும் மிகத்தீரமாக முயன்று வருகிறது.
     சுற்றுச் சூழலை சாவநாசப்படுத்தும் இரும்பு உருக்காலைகளும், அனல் மின் நிலையங்களும் சி.டி.எம்அந்தஸ்து பெற்று கார்பன் டிரேடிங்கில் கோடி கோடியாகப் பணம் ஈட்டி வருகின்றன. இந்நிலையில் கார்பன் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றும் இந்தியக் காடுகளுக்கு ஏன் இந்த வர்த்தகத்தை விரிவு படுத்தக்கூடாது என்பது இந்திய அரசு எழுப்பும் ஒரு முக்கியமான கேள்வியாகும். இந்தியா வெளியிடும் கார்பனில் 12 சதவீதத்தை இந்த காடுகள் விழுங்கிவிடுகின்றன. இது பற்றி நமது முன்னாள் சுற்றுச்சுழல் துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் ஒரு கட்டுரை தயாரித்தார். இந்தியாவின் வனம் மற்றும் மரங்கள் கார்பன் தொட்டியாக இவற்றின் பங்களிப்பு (India’s Forest and Tree Cover : Contribution as Carbon Sink) என்பது அக்கட்டுரையின்  பெயராகும். “உலகப்பருவநிலை மாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் காடுகள் மையமான இடங்த்தில் உள்ளன. காடுகள் கார்பனை வெளிவிடும். அதே நேரத்தில் கார்பனைத் தேக்கிவைக்கும் தொட்டியாகவும் பயன்படுகின்றன. நடைபெற்று வரும் பருவநிலை மாற்றம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் காடுவளர்ப்பிற்கு ஊக்கத்தொகைகளும், இழப்பீடுகளும் தருவதற்கான ஒருங்கிணைந்த ஒரு ஒப்பந்தம் நமக்குத் தேவை என்பது இந்தியாவின் பார்வையாக்கும்என்று அவர் அதில் கூறியிருந்தார்.
     கார்பன் வணிகத்தில் காடுகளை இணைப்பதை மனதில் கொண்டே பசுமை இந்தியாவிற்கான தேசிய திட்டம் () பருவநிலை மாற்றம் தொல்பான பிரதமரின் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதன் குறிக்கோள் இந்தியாவின் காடுகள் இற்றும் மரங்கள் அடர்ந்த பகுதியின் பரப்பளவை தற்பொதுள்ளதைவிட இரண்டு மடங்காக உயர்த்துவது. தற்போது ஐந்து மில்லியன் ஹெக்டேராக இருக்கும் காடுகளை பத்து மில்லியனாக உயர்த்தி, தேக்கி வைக்கப்படும் கார்பன் டை ஈக்ஸைடின் அளவை உயாத்துவது ஆகும்.
கிரீன் இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் மொத்தப் பரப்பளவில் மூன்றல் ஒரு பகுதியைக் காடுகளாக மாற்றுவது நமது நோக்கமென்று ஜெயராம் ரமேஷ் கூறியுள்ளார். காடுகளின் பரப்பளவை அதிகரிப்பதன் மூலம் அரசு என்ன சாதிக்க நினைக்கிறது? காடுகளை அதிகரித்து புவி வெப்பமடைதலைத் தடுத்து நிறுத்தி மாலத்தீவு, பங்களாதேஷ் போன்ற நாடுகளையும், நமது னடலோரப் பகுதி மக்கயும் பாதுகாப்பது என்ற உயாந்த நோக்கத்தின் அடிப்படையில் தான் மன்மோகன் சிங்கும். மற்ற  அமைச்சர்களும் செயல்படுகிறார்களா?
     அரசு தரும் தலை சுற்ற வைக்கும் புள்ளி விவரம். 1995 லிருந்து 2005 வரை நமது காடுகளில் தேக்கி வைக்கப்பட்டுள்ள கார்பனின் அளவு 6024 மில்லியன்  டன்னிலிருந்து 6062 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. ஒவ்வொஐ ஆண்டும் காடுகளின் பரப்பளவு அதிகரிப்பதன் காரணைமாக 38 மில்லியன் டன் கார்பன் அதிகமாகதேக்கி வைக்கப்பட்டு வருகிறது.... இந்தியாவின் காடுகளும், மரங்கள் அடர்ந்த பகுதிகளும் கார்பன் வெளியெற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் இந்தியாவிற்கு உலகிற்கும் மிகச் சிறந்த பங்காற்றகின்றன.
     அடுத்து வருவது தான் முக்கியமான விஷயம்நமது காடுகளில் தேக்க வைக்கப்பட்டி ருக்குமு ஒரு டன் கார்பனின் விலை 5 யு.எஸ். டாலர் என்று மிகக் குறைவாகவே மதிப்பிட்டாலும், 24000 மில்லியன் டன் கார்பன் நமது காடுகளில் உள்ளது. இது 120 பில்லயன் யு.எஸ். டாலர் அல்லது 6 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ளதாகும். 2005 வாக்கில் வராலாற்றில் முன்னெப்பொதும் இல்லாத விதத்தில் காடுகள் இந்தியாவில் அதிகாரிக்கும் போது ஒவ்வொரு ஆண்டும் 6000 கோடி ரூபாய் அதிக வரவாய் கிடைக்கும். அப்போது ஒரு டன்னுக்கு கார்பனின் விலை  7 யு.எஸ்.டி. ஆக இருக்கும்.
     இது தான் உண்மை மாலத்தீவோ, பங்களாதேஷோ எக்கேடு கெட்டாலும், டெல்லியே முழ்கிப்போனாலும் இந்திய ஆளும் வர்க்கங்கள்கவலைபடப்போவதில்லை. இந்தியக் காடுகளில் உள்ள மரம், மட்டைகளைக் கணக்கெடுத்து அவற்றிற்கு ஒரு ரேட் பேசி பணத்தை கைப்பற்றுவதே ஆளும் வர்க்கங்களின் நோக்கம். ( மேற்சொன்ன மேற்கொள் கார்பன் தொட்டிகளாக இந்தியக் காடுகள் என்ற சுப்ரத்குமார் சாஹூவின் கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.)
     இந்தியக் காடுகள் சி.டி.எம் அந்தஸ்து பெற்று கார்பன் வணிகத்தில் நுழைந்துவிட்டால் இது நாள்வரை காடுகளைக் காப்பாற்றி வந்திருக்கும் பழங்குடி மக்களுக்கு அதில் ஏதாவது கிடைக்குமா? “இந்தியக் காடுகளுக்கு சி.டி.கம். அந்தஸ்து பெறுவதில் இந்திய அரசு காட்டும் தீவிரம், உறுதி காடுகளில் தனியார் மயப்படுத்துவதில் உள்ள தடைக்கல்லை நீக்குவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ்வளவு பணம் கிடைப்பதற்கு வாய்ப்புள்ள நிலையில் காடுகளைத் திறமைளாக நிர்வகிக்க  முடியாதவர்களின் ( திறமையாக என்றால் முதலாளித்துவ எதர்பார்ப்பகளின் படி) கரங்களில் விட்டு வைப்பது சாத்தியமேயில்லை. (சுப்ரத்குமார் சாஹூ, மேற்சொன்ன கட்டுரையில்)
     இந்திய அரசின் எல்லா கொள்ளை நடவடிக்கைகளிலும் உற்ற துணைவனாக பங்காளியாக இருந்துவரும், உணமையில் கொள்ளை அடிப்பதற்கு புதுப்பது வழிவகைகளையும் சொல்லித்தரும் உலகவங்கியும் காடுகளைத் தனியார் மயப்படுத்துதலுக்கு ஆதரவாக, வக்கீலாக மாறி வாதிடுகிறது. பழங்குடியினங்கள் வெற்றிகரமாக காடுகளைப் பாதுகாத்து வந்தாலும், அவற்றால் காடுகளை லாபகரமாகப் பயன்படுத்தி பணம் ஈட்ட முடிவதில்லை என்கிறது உலக வங்கி.
     அபிவிருத்தி செய்யப்பட்ட இந்தியக் காடுகளில் இருந்து பெறப்படும் மரங்கள், மூங்கில், மற்ற பொருட்களிலிருந்து கிடைக்கும் வன வருவாய் 2004ல் 222 மில்லியன் யு.எஸ்.டாலரிலிருந்து 2020லி 2000 மில்லியன் யு.எஸ். டாலராக உயாந்து விடும் என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது. அதாவது 10 மடங்கு. காடுகளில் இவ்வளவு பணம் இருக்கும் போது தனியார்துறை தன் ஆவலை அடக்கிக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் என்பது நம்பமுடியாததாகும். அபிவிருத்தி செய்யப்பட்ட ஏராளமான மரங்களை செயற்கையாக நட்டுப் பராமரிப்பதாகும். இது உண்மையில் வனங்களின் இயற்கையான தன்மையை அழிப்பதாகும். இப்பொதுள்ள தேக்கு. யூக்கலிப்டஸ் தோட்டங்கள் போல காடுகள் அனைத்தையும் மாற்றுவதாகும். இது உண்மையில் வன அழிப்பே தவிர வனப்பாதுகாப்பு அல்ல இச்செயல்பாடு சுற்றுச் சூழலை பேரழிவுக்கு உள்ளாக்கக் கூடியது. காடுகளைத் தனியார் மயப்படுத்துவதற்கான ஆரம்பக் கட்ட வேலைகள் பல ஆண்டுகளாகவே  நடைபெற்று வருகின்றன. ஜப்பானிய அரசாங்கத்தின் (JBIC)திட்டப்படி பெருமளவு பணம் வனத்துறைக்குள் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. ஸ்வீடன் நாடும்இந்தியாவில் வனவளாப்புத் திட்டத்தில் இறங்கியுள்ளது. ஒரிசாவின் படபகால் கிராமத்தின் ஹேமந்த் பகேரா திகைப்புடன் கேட்கிறார், “எங்கள் கிராமக்காட்டில் (JBIC) திட்டத்தை செயல்படுத்த சில வனத்துறை அதிகாரிகள் எங்களைத் தயார்செய்ய முயல்கிறார்கள். இங்கே மரங்களை நடுவதற்காக ஜப்பான் அரசு உங்களுக்கு ஏன் இவ்வளவு பணம் தருகிறது. என்று நாங்கள் கேட்டோம் . இங்கே மரங்கள் நட்டால் ஜப்பானுக்கு சுத்தமான காற்று செல்லும் என்று வனத்துறை அதிகாரி சொன்னார்.” (சுப்தர்குமார் சாஹூ)
     இதோ போன்ற ஒரு கதை இங்கு அட்டப்பாடி பள்ளத்தாக்கிலும் உள்ளது. ஜப்பான் நிதியுதவியோடு ஏராளமான பரங்கள் காடுகளுக்குள் நடப்படுகின்றன. அட்டப்பாடி பள்ளத்தாக்கில் மரம் நடுவது ஜப்பானுக்கு நல்லது என்று இங்கேயும் சொல்லப்படுகிறது. வேடிக்கைதான்!
     இந்த மரம் வளர்க்கும் திட்டங்கள் எப்படி செயல்படுகின்றன  என்பதற்கு ஒரு உதாரணம்கோத்தகிரியில் 20 ஆண்டுகளுக்கு முன்பு தோடர் பழங்குடி மக்கள் நிலங்களில் வனத்துறை மரம் நட்டது. மரங்கள் வளர்ந்ததும்  அந்தப்பகுதி அரசின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவிக்கப்பட்டு விட்டது. ( ஆதிவாசிகளின் குரல் பக்கம்126)
     இந்த பசுமை இந்தியா திட்டமானது தற்போதுள்ள வடிவத்தில் செயல்படுத்தப்பட்டால் அது நிலம் பறிக்கப்படுவதை அதிகரிக்கும். மக்கள் உரிமைகளை ஒழித்துக்கட்டும். சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும். பொதுவான நிலங்கள், அதன் அடிப்படையான வாழ்க்கை முறை ஆகியவற்றை நாம் இழப்பதற்குக் காரணமாகிவிடும் அதே நேரத்தில் தற்போது கொழுந்துவிட்டு எரிந்துவரும் பிரச்சனையான பருவநிலை மாற்றத்திற்கு இதனால் எந்த உபயோகமும் இல்லை. இந்தியக்காட்டு நிலங்கள் லட்சக்கணக்கான மக்களுக்கு இருப்பிடங்களாக உள்ளன. அதிகாரப்பூர்வமாக காடு என்று அரசு அறிவித்துள்ள பிரம்மாண்டமான பகுதிகளில் உண்மையில் மக்கள் வாழ்ந்தும், விவசாயம் செய்தும் வருகிறார்கள். வனத்துறையின் முக்கியமான பசுமை நடவடிக்கை என்பது மரம் நடுவதாகும். இந்தக் காடு வளர்ப்புத்திட்டங்கள் பெரும் பாலம் மேய்ச்சல் நிலங்களிலுமே செயல்படுத்தபடுகின்றன. இவை மக்களுக்கு சொந்தமானவை. அதே நேரம் செழிப்பான சிறந்த காடுகளையும், புல்தரைகளையும் அவற்றிலுள்ள பல்லுயிர்களையும் அழிக்கவல்லவை இந்தக் காடு வளர்ப்புத் திட்டங்கள் என்று வன இயக்கங்களின் கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது. (Green India Mission- Forest movementa’ joint statement, The Forestrightsact.com).
     காடுகளை கார்பன் வணிகத்திற்குள் கொண்டுவருவது என்பது உண்மையில் அவற்றைத் தனியார் மயப்படுத்துவதற்கான முதல்படி என்ற அமெரிக்காவிலும் பல காட்டுப்பிரதேசங்கள் பன்னாட்டு நிறுவனங்களின்  நிர்வாகத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளன. அங்கே பன்னாட்டு பாவத்தைப் போக்கி வருவதாகச் சொல்லிக் கொள்கின்றன.
     ஷேல் எண்ணெய் நிறுவனம், ரஷ்யாவின் கேப்ரோம் நிறுவனம் மற்றும் கிளிண்டன் பவுண்டெஷன் ஆகியவை இணைந்து இந்தோனேஷியாவின் 1,00,000 ஏக்கர் சதுப்புநிலக்காடுகளை பாதுகாக்கும் ரிம்பாரே திட்டத்தில் பெரும்பணம் முதலீடு செய்ய உள்ளன. இந்த சதுப்புக் காடுகள் கார்பனைக் கட்டுப்படுத்துவதன் மூலம் வரும் 30 ஆண்டுகளில் இந்நிறுவனங்கள் 750 ஆயிரம் கோடி டாலா ஈட்டியிருக்குமாம்.
     வங்கிகள், தொண்டு நிறுவனங்கள், கார்பன் வணிகர்கள், சுற்றுச் சுழல் பாதுகாப்புக் குழுக்கள், எரிவாயு நிறுவனங்கள்எண்ணெய்ப் பனை பயிரிடும் நிறுவனங்கள் என்று பலவகையான அமைப்புகள் வனப்பாதுகாப்புத் துறையில் இறங்கியுள்ளன. உலகத்தின் மிகப்பெரிய எண்ணெய், சுரங்கம், கார் மற்றும் எரிவாயு நிறுவனங்கள் இந்த வனப்பாதுகாப்புத் திட்டத்தில் பல்லாயிரம் கோடி ஈட்ட உள்ளன. என்று சர்வேதேசப் பூவுலகின் நண்பாகள் அமைப்பு கூறியுள்ளது.
     இதன் மூலம் காடுகள் விற்று வாங்கப்படும் சரக்குகளாக்கப்படும். மக்களின் பாரம்பரிய நிலங்களும் வாழ்வாதரங்களும் அவர்களின் கருத்தைக் கேட்காமலேயே கார்பன் டிரேடிங் முறையில் பண்டமாற்று  சரக்குகளாக மாறிவிடுகின்றன. வனங்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் துடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வனங்கள் குறித்தோ, சுற்றுச் சூழல் குறித்தோ எந்த அக்கறையுமில்லை.
இப்படி வனங்களைத் தனியார் மயமாக்குவது என்பது ஏற்கனவே அமிக்கா,   ஜப்பான், ஸ்வீடன் நாடுகளில் நடந்ததுதான். இந்நாடுகளில் ஏற்கனவெ 70% காடுகள் தனியாரின் கரங்களில் உள்ளன. இந்த நாடுகள்தான் இந்தியாவில் காடுவளர்ப்பில் தீவர அக்கறை காட்டி வருகின்றன.
     இது போன்ற ஒரு சூழல் நமது காடுகளில் நம் கண் முன்னே ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. பழங்குடி மக்கள் மட்டுமல்ல, எல்லாப்பகுதி மக்களும் இதனால் பாதிக்கப்பட உள்ளனர். இந்தியாவின் மூன்றில் ஒரு பகுதியை காடாக மாற்றுவத போன்ற லாபத்தை மட்டுமே குறிகோளாகக் கொண்ட திட்டங்கள் மிகப் பெரிய அளவிற்கு உணவு உற்பத்தியில் வீழ்ச்சியைக் கொண்டு வரும். ஏற்கனவே உலகமயமாக்கலுக்குப் பிறகு இந்தியா வெளியிடும் கார்பன் அளவு 57% அதிகரித்துள்ளது என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
புலி, எலி என்று பேசும் உள்ளா தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இது பற்றியெல்லாம் வாயே திறப்பதில்லை. அமெரிக்கா கியோட்டா ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளவேயில்லை. ஆனால், அமெரிக்காவிலிருந்து செயல்படும் மிகப்பெரிய பன்னாட்டு சுற்றுச் சூழல் நிறுவனமாக உலக் கானுயா நிதியம் (WWF) கார்பன் வணிகத்தில் இயற்கை காடுகளை இணைப்பதை ஆதரித்துள்ளது.
புலிகள் காப்பகம், வனங்களைப் பெருக்குவது, வனப்பாதுகாப்பு,லாபகரமாகக் காடுகளை பயன்படுத்துவது என்று பல முகமுடிகளணிந்து அரசும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் வருகின்றன. எந்த முகமூடியணிந்து வந்தாலும்அடிப்படை நோக்கம் என்னவோ காடுகளைவிட்டு மக்களை விரட்டிவிட்டு அவற்றைப் பணத்திற்காக பிழிந்து எடுப்பதுதான்